Mahajana College

 

100TH

Year Anniversary

1910 - 2010

 

Continue

 

29th Jan 2014

மகாஜனா மாவட்டமட்‌டா சாம்பியன்

 

மாவட்டமட்‌டா பாடசாலைகளுக்கு இடையிலான 13 வயதுப் பிரிவு பெண்களுக்கான உதைப்பந்த ட்‌டாப் போட்‌டியின் இறுதியாட்டதில் மகாஜனா கல்லூரி வெற்றி பெற்று மாவட்டமட்‌டா சாம்பியானது.

History

 

•மகாஜனக் கல்லூரி வரலாறு

இலங்கையில் மேற்குலகக் காலனித்துவ ஆட்சிக்காலப்பகுதியில், காலனித்துவ அரசாங்கத்தினால் கத்தோலிக்கப் பாடசாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அப்பாடசாலைகள் கல்வியின் முன்னிலைப் படுத்தப்பட்டதுடன் அப்பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியினைத் தொடர்வதற்கு வாய்ப்ளிக்கப்பட்டதுடன் சைவத்தமிழ் மக்களுக்குப் பாரபட்சம் காட்டப்பட்டது. இக்காலகட்டத்தில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றிவந்த பாவலர் தெ. துரையப்பாப்பிள்ளை அவர்கள் சைவத்தமிழ் மக்களும் ஆங்கில மொழிப் புலமை பெற்று அவர்களும் வேலை வாய்ப்புக்களைப் பெறவேண்டும் என்ற நற்சிந்தனையோடு, தனது ஆசிரியப் பதவியினையும் துறந்து, போதிய பண வசதியோ இட வசதியோ அற்ற நிலைமையிலும் தனது அறிவாற்றலையும் தன்னம்பிக்கையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு தெல்லிப்பளையிலுள்ள அவரது வீட்டில் 1910 ஆம் ஆண்டு வைகாசி மாதம் மகாஜன உயர்தர ஆங்கிலக் கல்லூரியை நிறுவி, அரச உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையிலும், தமிழ் மக்களின் நிதியுதவியுடன் அமெரிக்க மிசன் பாடசாலைகளுக்கு நிகராக கல்லூரியை திறம்பட நடாத்திவந்தார்.

 

இரண்டு வருடங்கள் பாவலர் இல்லத்தில் இயங்கிவந்த மகாஜன உயர்தர ஆங்கிலக் கல்லூரி, 1912 ஆம் ஆண்டு ஆவணி மாதம் நல்லுள்ளம் கொண்டோரது நிதியுதவியுடன் தற்போது கல்லூரி இயங்கிக்கொண்டிருக்கும் இடமான அம்பனை, தெல்லிப்பளை என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. பல தடவைகள் அரச உதவி பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், 1919 ஆம் ஆண்டிலேயே முதல் அரச உதவி கிடைக்கப்பெற்றது. தொடர்ந்து, மகாஜன உயர்தர ஆங்கிலக் கல்லூரி வளாகத்தினுள் இயங்கிவந்த சரஸ்வதி தமிழ் பாடசாலை, மகாஜனக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டு ஆரம்ப வகுப்பிலிருந்து உயர்தர வகுப்புவரை நிறுவப்பட்டது.

 

மகாஜனக் கல்லூரி ஸ்தாபகரான பாவலர் தெ. துரையப்பாப்பிள்ளை அவர்கள், 24.06.1929 அன்று காலமானார். அவரை நன்றியுடன் நினைவுகூரும் முகமாக ஆண்டுதோறும் அவர் இறந்த தினமான ஆனி 24 ஆம் திகதி ஸ்தாபகர் தினம் நினைவுகூரப்பட்டு வருகின்றது. ஸ்தாபகரின் மறைவைத் தொடர்ந்து, கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றிவந்த திரு. சின்னப்பா அவர்கள் அதிபராகக் கடமையேற்று, பாவலர் வழியில் பாடசாலையைத் திறம்பட வழிநடாத்தி வந்தார். 1936 ஆம் ஆண்டு கல்லூரியில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப் பட்டதுடன், 1943 ஆம் ஆண்டு கல்லூரியில் பெண்கள் கல்விகற்பதற்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் செல்வி. இராஜமலர் சின்னையா அவர்கள் கல்லூரியின் முதலாவது ஆசிரியையாக நியமிக்கப்பட்டார். அதிபர் திரு. சின்னப்பா அவர்கள், 1941 ஆம் ஆண்டு நவீன விஞ்ஞானக் கல்வி கற்பிக்கும் வசதியினை கல்லூரியில் ஏற்படுத்தினார். இதுவரை 160 ஆகவிருந்த கல்லூரி மாணவர் தொகை, இவரது காலப்பகுதியில் 300 ஆக உயர்வடைந்தது. தொடர்ந்து, 17.07.1945 அன்று திரு. சின்னப்பா அவர்கள் அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்டார்.

 

அவரைத்தொடர்ந்து, கல்லூரியின் பழைய மாணவரும், 1932 ஆம் ஆண்டிலிருந்து கல்லூரியின் ஆசிரியராகக் கடமையாற்றியவரும், கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பாப்பிள்ளையின் புதல்வருமான திரு. தெ. து. ஜெயரத்தினம் அவர்கள் 03.09.1945 அன்று கல்லூரி அதிபராகக் கடமையேற்றுக்கொண்டார். இவரது காலப்பகுதியே மகாஜனக் கல்லூரியின் பொற்காலமாகும். கல்லூரி சகல துறைகளிலும் அபார வளர்ச்சி பெற்று 2000 மாணவர்கள்வரை கல்விகற்கக்கூடிய வசதிகொண்ட கல்லூரியாக வளர்ச்சி கண்டதுடன் இலங்கைத்தீவின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாக உயர்ந்தது.

 

நிர்வாகக் கட்டமைப்பு, கல்வி, விளையாட்டு, கலைகலாச்சாரம் போன்றவற்றில் கல்லூரி சிறப்புற்றது. அத்துடன் புதிய வகுப்பறைக் கட்டடங்கள், விளையாட்டுமைதானம், விஞ்ஞான ஆய்வுகூடங்கள், நூலகம், கைவினை, மனையியல் மற்றும் நடனம் ஆகிய பாடங்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், தேனீர்ச்சாலை மற்றும் புத்தகசாலை என கல்லூரியின் வளர்ச்சி பார்ப்போர் வியக்கும் வண்ணமிருந்தது. அதுமட்டுமன்றி, மகாஜனன் என்ற வருடாந்த மலர் வெளியீட்டினையும் தொடக்கி வைத்தவர் அதிபர் திரு. தெ. து. ஜெயரத்தினம் அவர்களேயாவார். இதன்காரணமாக அதிபர். திரு. தெ. து. ஜெயரத்தினம் அவர்கள் மகாஜன சிற்பி எனப் போற்றப்படுகின்றார்.

 

மகாஜன சிற்பி, அதிபர் திரு. தெ. து. ஜெயரத்தினம் காலப்பகுதியின் முக்கிய நிகழ்வுகள்.

 

1945 Mahajana College எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

•1946 மகாஜனக் கல்லூரி சுலோகம் உன்னை நீ அறிவாய் (Know theyself) பதிவாகியது.

•1947 மகாஜனக் கல்லூரி விளையாட்டுப்பிரிவு, யாழ் விளையாட்டுக் கழகத்தில் (JSSA) பதிவு செய்யப்பட்டது.

•1947 மகாஜனக் கல்லூரிக்கு இரண்டாந்தரப் (Grade 2) பாடசாலைக்குரிய அரச நியமனம் கிடைத்தது.

•1948 உயர்தர விஞ்ஞான வகுப்புக்கள் (HSC) ஆரம்பிக்கப்பட்டன.

•1949 மகாஜனக் கல்லூரிக்கு முதற்தர (Grade 1) பாடசாலைக்குரிய அரச நியமனம் கிடைத்தது.

•1951 கல்லூரிக்கீதம் மற்றும் கொடிக்கீதம் என்பன ஆசிரியர் வித்துவான் சிவபாதசுந்தரனார் அவர்களால் இயற்றப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன.

•1952 புதிய நவீன பௌதீக ஆய்வுகூடம் திறக்கப்பட்டது.

•1953 புதிய நவீன இரசாயண ஆய்வுகூடம் திறக்கப்பட்டது.

•1954 இலங்கையின் பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மகாஜனக் கல்லூரியை நாடிவர ஆரம்பித்ததைத் தொடர்ந்து மாணவர் தங்குவிடுதி கட்டப்பட்டது.

•1955 ஸ்தாபகர் பாவலர் துரையப்பாப்பிள்ளை நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

•1956 மாவிட்டபுர கந்தசுவாமி கோவில் பூசை ஒன்று மகாஜனக் கல்லூரியின் பெயரில் வருடாந்தம் செய்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

•1958 விளையாட்டு மைதானம் மறுசீரமைக்கப்பட்டது.

•1958 நடனம், மனையியல், கைவினை மற்றும் மரவேலை போன்ற பாடங்களுக்கான பிரத்தியேக வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் அமைக்கப்பட்டன.

•1960 கல்லூரியின் 50 ஆவது வருடப் பூர்த்தியினை முன்னிட்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.

•ஸ்தாபகர் பாவyலர் துரையப்பாப்பிள்ளை நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.

சிவகாமி சமேத நடராஜர் ஆலயம் அமைக்கப்பட்டது.

•1961 மகாஜனக் கல்லூரி Super Grade பாடசாலையாக அரசாங்கத்தினால் தரமுயர்த்தப்பட்டது.

•1963 38 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்று யாழ்மாவட்டத்தில் அதிகூடிய மாணவர்களைப் பல்கலைக்கழகம் அனுப்பிய பெருமையினை கல்லூரி பெற்றது.

•1970 வைர விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது.

•மகாஜன சிற்பி அதிபர் திரு. தெ.து. ஜெயரத்தினம் அவர்கள் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

•1971-1972 வரை திரு. எம். மகாதேவன் அவர்கள் அதிபராகக் கடமையாற்றி

•1972-9173 வரை திரு பி. எஸ். குமாரசாமி அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார்.

•1972 இல் ஸ்தாபகர் பாவலர் துரையப்பாப்பிள்ளை அவர்களது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

•1973-1976 வரை திரு. எஸ். சிவசுப்பிரமணியம் அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார்.

•1976-1979 வரை கல்லூரியின் நீண்டநாள் ஆசிரியரான திரு. பி. கனகசபாபதி அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார்.

•1976 இல், ஓய்வு பெற்றபின்னரும் கல்லூரியின்பால் மிகவும் கரிசனையுடன் இருந்துவந்த அதிபர் திரு. தெ. து. ஜெயரத்தினம் அவர்கள் 29.10.1976 அன்று காலமானார். தொடர்ந்து,

•ண்டுதோறும் ஐப்பசி 29 அன்று மகாஜன சிற்பி ஜெயரத்தினம் நினைவு நாள் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.

•1979.12.01 அன்று கல்லூரியின் அதிபராக திரு. கே. எஸ். இரத்தினேஸ்வர் கடமையேற்றார்.

•1980.07.01 அன்று திரு. பொன். சேமசுந்தரம் அவர்கள் கல்லூரியின் அதிபராகக் கடமையேற்றார்.

•1983.06.12 அன்று திரு. ரி. சண்முகசுந்தரம் அவர்கள் கல்லூரியின் அதிபராகக் கடமையேற்றார்.

•1984.08.01 அன்று திரு. வி. கந்தையா அவர்கள் கல்லூரியின் அதிபராகக் கடமையேற்றார்.

•1985.12.04 அன்று திரு. கெ. நாகராஜா அவர்கள் கல்லூரியின் அதிபராகக் கடமையேற்றார்.

•1990 ஆம் ஆண்டு கல்லூரி போரினால் இடம்பெயர்ந்து அருணோதயாக் கல்லூரியில் தற்காலிகமாக இயங்கியது.

•1991 ஆம் ஆண்டு மீண்டும் அருணோதயாக் கல்லூரியிலிருந்து இடம்பெயர்ந்து பண்டத்தரிப்பு பெண்கள் கல்லூரியில் இயங்கியது.

•1994 – 1999 வரை மருதனார் மடத்தில் தற்கால்க கொட்டகைகள் அமைக்கப்பட்டு கல்லூரி இயக்கப்பட்டது.

•1998 ஆம் ஆண்டு, அதிபர் திரு. கெ. நாகராஜா அவர்களின் ஓய்வினைத் தொடர்ந்து, கல்லூரியின் உப அதிபராகவிருந்த திரு. பி. சுந்தரலிங்கம் அவர்கள் அதிபராகக் கடமையேற்றார்.

•15.10.1999 அன்று கல்லூரி மீண்டும் சொந்த இடமான தெல்லிப்பளைக்கு கொண்டுவரப்பட்டு சொந்த இடத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியது.

•2006 ஆம் ஆண்டு திருமதி. சிவமலர் ஆனந்தசயனன் அவர்கள் கல்லூரியின் அதிபராகக் கடமையேற்று, கல்லூரியின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையினைப் பெற்றார்.

•2011 ஆம் ஆண்டு திரு.கு.வேல்சிவானந்தன் அவர்கள் கல்லூரியின் அதிபராகக் கடமையேற்றார்.

 

 

100th Year Annuversary

100.

 

abc

Continue

Late Principal

Mr T T jeyaratnam's 100th Year anniversary

 

மகாஜன சிற்பி தா.து.ஜெயரத்தினத்தின் 100வது பிறந்தநாள்.

(குரு அரவிந்தன்)

 

மகாஜனா சிற்பி பற்றி தாய் வீடு (Jan 2013) கனடா பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை.

கல்வியையே முக்கிய மூலதனமாகக் கொண்டது ஈழத்தமிழ் சமூகம் என்பதால், அந்நிய ஆதிக்கத்தில் இருந்து கல்வியையும், சைவமரபுகளையும் காப்பாற்றும் நோக்கத்தை இலட்சியமாகக் கொண்டு தமிழர் வாழ்ந்த பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டதுதான் சுதேசக்கல்வி நிறுவனங்கள். அந்தவகையிலே தமிழர் வாழ்ந்த பிரதேசங்களில் பல சுதேசக்கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப் பட்டாலும், அம்பனை என்ற இடத்தில் மகாஜன சிற்பி தா. து. ஜெயரத்தினத்தின் தந்தையான பாவலர் துரையப்பாபிள்ளையால் 1910ம் ஆண்டு அவரது வீட்டுத் திண்ணையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இன்று கல்வித்துறையில் மட்டுமல்ல, விளையாட்டுத்துறை நுண்கலைத்துறை போன்றவற்றிலும் பெயரும் புகழும் பெற்று விளங்கும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியாகும்.

 

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் அதன் அதிபராக இருந்த தா.து. ஜெயரத்தினம் அவர்களே. ‘உன்னை நீ அறிவாய்’ என்ற தாரக மந்திரத்தை ஒவ்வொரு மகாஜனன்களுக்கும் ஊட்டிவிட்ட பெருமை அவருக்கு உண்டு. அவரின் வெற்றிக்குக் காரணம் அவரது பண்பான குணங்களே. புன்முறுவல் தவளும் பொலிவான மலர்ந்த முகம்,எல்லோரையும் கவரும் இன்சொல், கம்பீரமான அடக்கம், சான்றோர்முன் பணிவு, எவரையும் தன் வசப்படுத்தும் சக்தி, அசையாத கடவுள் நம்பிக்கை போன்றவையே இவரின் உயர்வுக்குக் காரணமாகின்றன என்று முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வித்தியானந்தன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருப்பதாக ‘எம்மை வாழவைத்தவர்கள்’ என்ற தனது நூலில் முன்னாள் மகாஜனா கல்லூரி அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.

 

அதிபர் ஜெயரத்தினம் அவர்கள் காலத்தில் ஆண்டு தோறும் பல புதுமைகள் புகுத்தப்பட்டன. இவர் மகாஜனாக் கல்லூரியில் சாரணர் இயக்கத்தைத் தெடக்கி அதன் பொறுப்பாசிரியராகக் கடமையாற்றினார். தொடர்ந்து விளையாட்டுத் துறையில் அவருக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அதன் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். அக்காலத்தில் தலைசிறந்த ஆங்கில ஆசிரியர்களில் ஒருவராக இவர் கணிக்கப் பெற்றார். அதனால் கல்லூரி பங்குபற்றும் ஆங்கிலப் பேச்சுப்போட்டிகளுக்குப் பொறுப்பாக இருந்தார். 1935ம் ஆண்டு மகாஜனா வெள்ளிவிழக் கொண்டாட்டத்தின்போது மகாஜனன் என்ற வெள்ளிவிழா மலரை முதன் முதலாக வெளியிட்டார். 1960ல் தனது காலத்தில் நடந்த பொன்விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினார். 1946ம் ஆண்டு வடமாகாண ஆசிரியர் சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

 

பிற்காலத்தில் உயர்வகுப்பில் கல்வி கற்கும்போது அவரிடம் ஆங்கிலம் கற்கும் பாக்கியம் எனக்கும் கிடைத்ததையிட்டு நானும் பெருமைப் படுகின்றேன். ஆங்கிலம் கட்டாயம் கற்றவேண்டும் என்ற ஆர்வத்ததைத் தூண்டிவிட்டவர் அவர்தான். அதுமட்டுமல்ல சைவசமயத்தை வளர்ப்திலும் முன்னின்று பாடுபட்டார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு மட்டுமல்ல நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்கு ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதில் ஏனைய ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் முன்னோடியாக நின்றார்.

 

திரு. தா. து. ஜெயரத்தினம் அவர்கள் 1932ம் ஆண்டு உதவி ஆசிரியராக மகாஜனாக் கல்லூரியில் சேர்ந்தார். அதிபராக இருந்த சின்னப்பாபிள்ளையின் மரணத்தைத் தொடர்ந்து 1945ம் ஆண்டு மகாஜனாக் கல்லூரியின் அதிபராகக் கடமை ஏற்றார். மாணவர்களின் கல்வியில் அதிக அக்கறை கொண்ட இவரது விடா முயற்சியால் 1947ம் ஆண்டு மகாஜனா இரண்டாம்தரப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் இருந்து மகாஜனாக் கல்லூரிக்கு மேலதிக ஆசிரியர்கள் வரவழைக்கப் பட்டனர். தொடர்ந்து 1949ம் ஆண்டு மகாஜனாக் கல்லூரி முதலாம்தர பாடசாலையாக மாறியது. அந்த வருடம் வடமாகாண ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இவர் தெரிவு செய்யப்பட்டார். 1954ம் ஆண்டு கல்லூரிக் கட்டிட நிதிக்காக் களியாட்ட விழா ஒன்றை நடத்தி நிதி சேகரித்தார். இதற்காக இந்தியாவில் இருந்து சினிமா நடிகர்களை வரவழைத்தார். அதே ஆண்டு மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி வசதிகளைச் செய்து கொடுத்தார். 1955ம் ஆண்டு கல்லூரியில் சுயதொழில் கற்பதற்கான திட்டங்களைச் செயல்முறைப்படுத்தினார். மரவேலை, நெசவு, மனையியல் போன்ற புதிய துறைகளை அறிமுகப்படுத்தினார். 1957ம் ஆண்டு அவரது ஆசிரியப் பணியின் வெள்ளிவிழாவை கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து கொண்டாடினர். இதே ஆண்டு மகாஜனாக் கல்லூரியின் சார்பில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலிலும், திருக்கேதீஸ்வரம் கோயிலிலும் திருவிழாக்கள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இப்பொழுதும் மகாஜனாவின் சார்பில் வருடாவருடம் திருவிழாக்கள் செய்யப்படுகின்றன. 1958ம் ஆண்டு நடனம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. 1960ம் ஆண்டு கல்லூரி தனது பொன் விழாவைக் கொண்டாடியது. இதே ஆண்டு கல்லூரியை அரசு பொறுப்பேற்றது. பாடசாலையின் தேவை கருதி இவரது முயற்சியால் கல்லூரிக் காணியில் ஆலயம் அமைக்கப்பட்டது. இவரது காலத்தில் மகாஜனா கல்வியில் சிறந்து நின்றதால் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்தது. 1961ல் அதிஉயர் தரத்திற்குக் கல்லூரியின் தரம் உயர்த்தப்பட்டது.

 

இவரது காலத்தில் உதைபந்தாட்டத்தில் சாம்பியன்களாக வந்து கல்லூரி சாதனை படைத்தது. 1962ல் யப்பானில் நடந்த ஆசிய சாரணியர் விழாவில் மகாஜனா சாரணியர்களும் கலந்து கொண்டு பெருமை தேடித்தந்தனர். அதிபர் ஜெயரத்தினம் அவர்கள் யாழ் பாடசாலை விளையாட்டுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இதே வருடம் யாழ்ப்பாணத்திலேயே மிக அதிகமான மாணவர்கள் மகாஜனாக் கல்லூரியில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெற்றிருந்தனர். உதைபந்தாட்டத்தில் தொடர்ந்தும் மகாஜனா சாதனை படைத்தது. 1965ல் மகாஜனா ஹொக்கி விளையாட்டில் சாம்பியனாக வந்தது. இதே ஆண்டு நாடகத் துறையிலும் முதலிடத்தைப் பெற்றது. 1961ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல வருடங்கள் உதைபந்தாட்டத்திலும், ஹெக்கியிலும் மகாஜனா சாதனை படைத்து வந்தது. அதேபோல துடுப்பாட்டத்திலும், மெய்வல்லுனர் போட்டிகளிலும் அரிய சாதனைகளைப் படைத்தது. 1970ம் ஆண்டு வைரவிழாவை மகாஜனா கொண்டாடியபோது அதிபர் ஜெயரத்தினம் முன்னின்று வழிநடத்தினார். இரண்டு வாரங்கள் நடைபெற்ற இந்த விழாவைத் தொடர்ந்து வருட முடிவில் அதிபர் ஜெயரத்தினம் அவர்கள் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.

1972ம் ஆண்டு இவரது தந்தையான பாவலர் துரையப்பாபிள்ளையின் நூறாவது பிறந்தநாள் கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டபோது பாவலரின் நினைவாக நூலும் வெளியிடப்பட்டது. மகாஜன சிற்பியான இவரது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும், இவர் ஓய்வு பெற்றிருந்தாலும் 1978ம் ஆண்டு மகாஜனாவின் மாணவர் தொகை 2350க்கும் மேலாகியிருந்தது. இவரது காலத்தில் பல கட்டடங்கள், ஆய்வுகூடங்கள், விளையாட்டு மைதானங்கள், அரங்கங்கள் எல்லாம் புதிதாகக் கல்லூரிக்கு அணிசேர்த்திருந்தன. புத்தகசாலை, தேனீர்ச்சாலை போன்றனவும் மாணவர்களின் தேவைகருதி இடம் பெற்றன. 1970ம் ஆண்டு இவர் ஓய்வு பெற்று வீட்டிலே தங்கியிருந்தாலும் இவரது நினைவெல்லாம் கல்லூரியிலேயே இருந்தது. அந்த நல்ல நினைவோடு 1975ம் ஆண்டு இவர் அமரரானார். அந்த சோக செய்தியைக் கேட்டுக் கண்கலங்கியோர் பலர்.

 

 

மகாஜனா சிற்பி தா.து. ஜெயரத்தினத்தைக் கௌரவிக்கும் முகமாக அவரது பெயரும் மகாஜனா கல்லூரிக் கீதத்தில் இடம் பெறச் செய்யப்பட்டது. அதிபர் தா.து. ஜெயரத்தினத்தின் காலத்தை மகாஜனாவின் பொற்காலம் என்றும், போர் சூழ்நிலை காரணமாக இடம் பெயர்ந்த காலத்தை மகாஜனாவின் இருண்ட காலமாகவும் சிலர் குறிப்பிடுவர். பல வருடங்களாக இடம் பெயர்து அலைந்த மகாஜனாக் கல்லூரி 1999ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் திகதி; மீண்டும் தனது பழைய இருப்பிடத்திற்கு நிரந்தரமாக வந்தது. 2010ம் ஆண்டு மகாஜனாக்கல்லூரி நூற்றாண்டு கண்டபோது, கல்லூரியிலும் புலம்பெயர்ந்த மண்ணில் இயங்கும் பழைய மாணவர் சங்கங்களிலும் அதிபர் ஜெயரத்தினத்தின் பெயரும், அவர் கல்லூரிக்காற்றிய தொண்டும் நினைவு கூரப்பட்டது. மகாஜனாவின் இலக்கிய மைந்தர்களால் பல நூல்கள் சமர்ப்பணம் செய்யப்பட்டன. இன்று அவர் எங்கள் மத்தியில் இல்லாவிட்டாலும், மகாஜனன்கள் இருக்கும்வரை அவர் எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்பார். மாண்புற மகனாம் மகாஜன சிற்பி ஜெயரத் தினம்பணி நினைவோம்.

"T" வடிவில் இருந்து வளர்ந்த மகாஜனா!

தமக்காக மட்டும் வாழ்பவர்கள் மட்டமான மனிதர்கள்.மற்றவர்களுக்காக வாழுபவா்கள் மாமனிதர்கள்.அத்தகைய ஆத்மாக்களையே உலகம் மகாத்மாக்கள் ஆக்கி மதிப்பளிக்கிறது.தான் வாழ்ந்த சூழலில் வாழ்ந்த ஐனங்கள் வெறும் ஐடங்களாக அல்ல.மகாஜனன்களாகவே மாறவேண்டும் என்ற மனப்பாங்கோடும் பெரும் நோக்கோடும் தே.து.துரையப்பாபிள்ளை என்ற மாமனிதர் பிரசவித்த பிள்ளை தான் இன்றைய பென்னாம் பெரிய மகாஜனாக்கல்லூரி. அன்றைய பாடசாலைக்கட்டிடம் ”T” வடிவில் கல்லால் அமைந்து ஆதவனுக்கு ஓட்டால் உடல் மறைத்து அடக்கத்தோடு அமைந்திருந்தது. இக்கட்டிடமே மகாஜனாக்கல்லூரியின் முதலாவது கட்டிடமாகவும் அமைந்தது.

ஸ்தாபகரின் முதல் எழுத்தில் அமைக்கப்பட்ட இக் கட்டிடம் அன்று ”T” வடிவில் அமைந்திருந்த சிறு பள்ளிதான் இன்று திகைப்பினை அளிக்கும் வளர்ச்சி பெற்று பெரியதொரு விருட்சமாக வளா்ந்து நிற்கின்றது.

”ஆல் போல் தளைத்து அறுகுபோல் வேரூன்றி வளர்ந்து நிற்கும் மகாஜனா.

 

 

Continue